புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2024

ரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சம்பிக்க ரணவக்க

www.pungudutivuswiss.com
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக 
களமிறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் வேட்பாளராக களமிறங்க 
தயார். அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் புதன்கிழமை (27) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பலமான அரசியல் கூட்டணி ஒன்று தோற்றம் பெற வேண்டும். பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கும் வகையில் தேசியத்துக்காக ஒன்றிணைவோம்' செயற்திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.

புதிய அரசியல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.தேர்தல் வெற்றியை மாத்திரம் இலக்காகக் கொண்டு அரசியல் கூட்டணிகள் அமைக்கப்பட கூடாது. சிறந்த அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அழைப்பு விடுத்தால் அதனை ஏற்க தயார்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. இழக்கப்பட்டுள்ள மக்கள் செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு வேட்பாளர் ஒருவர் இல்லாத காரணத்தால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. எவ்வழியிலாவது ராஜபக்ஷர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதற்கு பஷில் ராஜபக்ஷ முயற்சிக்கிறார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு  பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னரே பொதுத்தேர்தலை நடத்துவதா அல்லது நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்றார்

ad

ad