புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2024

காசாவின் சுகாதார கட்டமைப்பை இலக்கு வைக்கும் இஸ்ரேலிய படை

www.pungudutivuswiss.com

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை இஸ்ரேலிய படையினர் அழித்துவருவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை இஸ்ரேலிய படையினர் அழித்துவருவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்

காசாவின் மருத்துவமனைகளில் தாமாக முன்வந்து பணியாற்றிய பின்னர்நாடு திரும்பியுள்ள மருத்துவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை இந்த வாரம் சந்திக்கவுள்ளனர்.

பைடன் நிர்வாகத்துடனான இந்த சந்திப்பின்போது பாதுகாப்பான உணவு விநியோகம் சுகாதார சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புதலிற்கு அவசியமான யுத்தநிறுத்த உடன்படிக்கை இன்றி குண்டு வீச்சில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்களிற்கான நிதி உதவியை அதிகரிப்பது அர்த்தமற்ற விடயம் என மருத்துவர்கள் வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைய இஸ்ரேலிய படையினர் அதிர்ச்சி தரும் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளனர் என காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் பணியாற்றிய பேராசிரியர் நிக்மேய்னார்ட் தெரிவித்துள்ளார்.

சுகாதார கட்டமைப்புகளை இஸ்ரேலிய படையினர் திட்டமிட்ட முறையில் அழிக்கின்றனர் எனவும், பணியாளர்களை அழிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

''இது வெறுமனே கட்டிடங்களை இலக்குவைப்பது தொடர்பானது மாத்திரமில்லை. இது மருத்துவமனையின் உட்கட்டமைப்பை அழிப்பது தொடர்பானது.

அல்ஸிபா மருத்துவமனையின் ஒக்சிசன் டாங்கியை அழிப்பது தொடர்பானது. சிடி ஸ்கானர்களை அழிப்பது மீண்டும் சுகாதார கட்டமைப்பை கட்டியெழுப்புவதை கடினமாக்குவது தொடர்பானது.'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஹமாஸ் அமைப்பை மாத்திரம் இலக்குவைக்கின்றார்கள் என்றால் ஏன் மருத்துவ கட்டமைப்பை அழிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காசாவின் 36 மருத்துவமனைகளில் எதுவும் முழுமையாக இயங்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீண்டும் அல்சிபா மருத்துவமனையின் மீது தாக்குதலை மேற்கொண்டது.

மேலும், இஸ்ரேல் நூற்றுக்கணக்கான மருத்துவபணியாளர்களை கைதுசெய்து கொலை செய்ததும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad