புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2024

வித்யா படுகொலை வழக்கு - மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி மரணம்

www.pungudutivuswiss.com



புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  கைதி  ஒருவர் சுகயீனத்தால் மரணமானார்.

புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சுகயீனத்தால் மரணமானார்

2015 ஆம் ஆண்டு ,யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தி யசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

மேலும் குறித்த நபரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

ad

ad