புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2024

ஒன்ராறியோவின் போக்குவரத்து 'ஒற்றைக் கட்டணத்' திட்டத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்!

www.pungudutivuswiss.comஒன்ராறியோ அரசு மாநில  பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் 'ஒற்றைக் கட்டண' ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது.

ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் 'ஒற்றைக் கட்டண' ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது

இவ்வொற்றைக் கட்டணத் திட்டம், ரிரிசி (TTC), 'கோ' (GO) ஆகிய போக்குவரத்துச் சேவைகளுக்கிடையேயும் பின்வரும் பின்வரும் சேவைகளுக்குமிடையிலான பயணிகள் மாறுகையின்போது பயணிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டணங்களைச் செலுத்துவதைத் தவிர்த்து, அவர்களுக்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 1600 டொலர்களைச் சேமிக்க உதவுகிறது. இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள போக்குவரத்துச் சேவைகளாவன:

மிசிசாகாவின் 'மைவே' போக்குவரத்து

பிரம்டன் போக்குவரத்து

டுறம் பிராந்திய போக்குவரத்து

யோர்க் பிராந்திய போக்குவரத்து

பரி போக்குவரத்து

பேர்லிங்டன் போக்குவரத்து

பிராட்ஃபோர்ட் மேற்கு குவில்லிம்பெரி போக்குவரத்து கிரான்ட் றிவர் போக்குவரத்து

கல்ஃப் போக்குவரத்து

ஹமில்டன் ஸ்ட்ரீட் ரயில்வே

மில்டன் போக்குவரத்து

ஓக்வில் போக்குவரத்து

இத்திட்டம் ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே மேற்படி சேவைகளுக்கிடையிலான 5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மாறுகைகள் இடம்பெற்றுள்ளன.

"5 மில்லியன் பயணிகள் மாறுகையை நிறைவுசெய்யும் இவ்வற்புதமான தருணமானது, போக்குவரத்துச் சேவைகளுக்கிடையிலான பயணிகள் மாறுகைத் திட்டம் பயணிகளுக்கு மலிவான கட்டணத்திலும், அவர்கள் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளைச் சென்றடைவதை இலகுவாகவும் மாற்றியுள்ளதென்பது இத்திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும்" என ஒன்ராறியோவின் போக்குவரத்து அமைச்சின் இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.

பயணிகள் 'பிரெஸ்டோ' (PRESTO) கட்டண அட்டை, கடனட்டை, வங்கி அட்டை, கூகிள் வொலட்டில் உள்ள பிரெஸ்டோ செயலி போன்ற தாம் விரும்பும் தெரிவுகளைப் பயன்படுத்தலாம். அதேநேரத்தில், ஐஃபோன் மற்றும் அப்பிள் கடிகாரம் ஆகிய கட்டணத் தெரிவுகளும் விரைவில் உங்கள் பிரெஸ்டோ அட்டையுடன் சேர்க்கப்படும்

ad

ad