புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2024

திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினிக்கு குவியும் வாழ்த்து!

www.pungudutivuswiss.com


உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை  எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த  தமிழரான தர்ஜினி சிவலிங்கம்  திருமண பந்தத்தில் இணைந்துள்ள  நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனை சொந்த இடமாக கொண்ட தர்ஜினி சிவலிங்கம் யா/ வசாவிசான் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார்.

இவர் , 2009 ஆம் ஆண்டு முதல் இவர் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வந்தார்.

அதன் பின்னர் இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து கடந்த வருடம் ஓய்வுபெற்றபோதும் ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.

இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் பெருமையை பெற்றா தர்ஜினி , இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம் ஆண்டு வகித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது தென்னாபிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் – இலங்கை சார்பாக விளையாடிய பின்னர், தனது ஒய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந் நிலையில் நேற்றையதினம் திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினி சிவலிங்கத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள்.

ad

ad