புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2024

துட்டகைமுனு சிங்கள மன்னன் இல்லை - அவன் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழியே இல்லை

www.pungudutivuswiss.com


மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

13ஆவது சீர்திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி தோன்றியதாகவும் அதற்கு முன் சிங்கள இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறுவது போல துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் இல்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில் சிங்களம் என்ற ஒரு மொழியே இல்லை.

துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் எனக் கூறும் மெர்வின் சில்வா இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாளி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளின் கலவையிலேயே சிங்கள மொழி உருவாக்கப்பட்டது. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு பாளி மொழியும் கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழ் மொழியே இலங்கை தீவின் ஆதி மொழி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad