புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2024

சுவிட்சர்லாந்தயுக்ரேன் அமைதி மாநாட்டின் முன்மொழிவில் கையெழுத்திடாத இந்தியா - என்ன நடந்தது

www.pungudutivuswiss.com
ஜெலென்ஸ்கி உச்சிமாநாட்டின் முன்மொழிவுகளை ரஷ்யாவிடம்
முன்வைக்க விரும்புகிறார்
சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்திருக்கும் யுக்ரேன் அமைதிக்கான உச்சி மாநாட்டில் அணுசக்தித் தளங்களின் பாதுகாப்பு பற்றியும், யுக்ரேனின் உணவு ஏற்றுமதியை உறுதி செய்வதற்கான வழிகள் பற்றியும் உலகத் தலைவர்கள் ஆலோசனை செய்தனர்.

மாநாட்டின் இறுதியில், யுக்ரேனின் எல்லை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பல நாடுகள் ஒரு முன்மொழிவை வரையறுத்தன.

ஜூன் 15 மறும் 16-ஆம் தேதிகளில், நடந்த இந்த மாநாட்டில், ரஷ்யா -யுக்ரேன் போரின் பெரும் துயரம் மற்றும் அழிவுக்கான அனைத்துப் பொறுப்பையும் ரஷ்யாவின் மீது சுமத்தும் ஒரு இறுதி முன்மொழிவை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். இது யுக்ரேன் தரப்பில் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆனால், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சௌதி அரேபியா உள்ளிட்டப் பல நாடுகள் இந்த முன்மொழிவில் கையெழுத்திடவில்லை.

90-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் யுக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் ஒரு செயல்முறைக்கு சாத்தியமான திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டன. ஆனால் மாநாட்டுக்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை, அதன் மிகப்பெரிய ஆதரவு நாடான சீனாவும் பங்கேற்கவில்லை. இது சிலரை உச்சிமாநாட்டின் செயல்திறன் குறித்து சந்தேகிக்க வழிவகுத்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை - யுக்ரேன் என்ன சொல்கிறது?
15 ஜூன் 2024
ஜி7 மாநாடு: உறுப்பினராகவே இல்லாத இந்தியாவை தொடர்ந்து அழைப்பது ஏன்?
15 ஜூன் 2024
ஹமாஸ் பிடியில் இஸ்ரேல் பணயக்கைதிகள் அனுபவித்த துயரம் - பெற்றோர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்
14 ஜூன் 2024
யுக்ரேன் அமைதி உச்சி மாநாடுபட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சுவிட்சர்லாந்தில் ஜூன் 15 மறும் 16-ஆம் தேதிகளில், இந்த மாநாடு நடந்தது
‘போர்’ என்ற வார்த்தை பயன்பாடு
சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் ரிசார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சி மாநாட்டில் கூடியிருந்தவர்களில் சிலர் யுக்ரேனின் நெருங்கிய ஆதரவாளர்கள் அல்ல. சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர், யுக்ரேன் கடினமான சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று எச்சரித்த நிலையில் இந்த மாநாட்டில் சவுதியும் பங்கேற்றுள்ளது. ரஷ்யா மீதான சமீபத்திய தடைகளுக்கு எதிராக பேசிய கென்யாவும் இந்த மாநாட்டில் உள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், மாநாட்டின் இறுதி முன்மொழிவின் வரைவைப் பெற்றுள்ளது. அதன்படி அசோவ் கடல் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் துறைமுகங்கள் மீது யுக்ரேன் மீண்டும் கட்டுப்பாட்டைக் கோருகிறது, இவை இரண்டும் இப்போது ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ளன.

'போர்' என்ற வார்த்தை ரஷ்யாவின் படையெடுப்பை விவரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா தரப்பில் இந்த வார்த்தை பயன்பாட்டை மறுத்துள்ளது.

பிணைக்கைதிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் நாடு திரும்புதல் போன்ற மனிதாபிமான விவகாரங்கள் குறித்தும் முன்மொழிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பகுதிகளின் நிலை போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி பின்னர் விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விரிவுப்படுத்த, உச்சிமாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் இரண்டாவது கூட்டத்தை, சவுதி அரேபியாவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

50,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இந்த ராட்சத வாத்து என்ன சாப்பிட்டது தெரியுமா?
16 ஜூன் 2024
சீனாவிடம் கடன் வாங்க ஆர்வம் காட்டும் வங்கதேசம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
16 ஜூன் 2024
ஹஜ் புனிதப் பயணத்தின் பெயரால் மோசடி செய்யும் நிறுவனங்கள் - தப்புவது எப்படி?
15 ஜூன் 2024
யுக்ரேன் அமைதி உச்சி மாநாடுபட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மேற்கத்திய தலைவர்கள் புதினின் கருத்தை கடுமையாக நிராகரித்தனர்
முடிவுகள் ரஷ்யாவுக்குத் தெரிவிக்கப்படும்
யுக்ரேனில் அமைதி நிலையை எட்டுவதற்கான தங்கள் முயற்சியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டதாக டச்சு பிரதமர் மார்க் ரூட்டே கூறினார்.

"நாங்கள் அமைதியை நிலைநாட்டும் ஆரம் நிலையில் மட்டுமே இருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும், இது அமைதிக்கான பாதையின் ஆரம்பம்," என்று அவர் கூறினார்.

"இந்த உச்சி மாநாட்டு மேசையில் அமர்ந்திருக்கும் எங்களில் சிலருக்கு யுக்ரேனுக்கான சமாதானத்தை எவ்வாறு சரியாகப் பெறுவது என்பது குறித்து வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், கொள்கைகள், மதிப்புகள், கண்ணியம் ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட பார்வையில் எந்தத் தவறும் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளோம்,” என்றார்.

"நீங்கள் வேறொரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டாம். குழந்தைகளைக் கடத்தாதீர்கள். உலக உணவு விநியோகத்தில் அரசியல் விளையாட்டு நடத்த வேண்டாம். மேலும் அணுசக்திப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள்," என்றும் மார்க் ரூட்டே கூறினார்.

மாநாட்டின் அனைத்து பங்கேற்பாளர்களும் ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் இறுதி அறிக்கையை அங்கீகரிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம், "இந்த அறிக்கை ஒருமனதாக ஆதரிக்கப்படாது,” என்று கூறினார்.

சுவிஸ் மாநாட்டின் முடிவுகள் ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்படும் என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தார்.

"இரண்டாவது அமைதிக்கான உச்சி மாநாட்டில் தான் நாம் போரின் உண்மையான விளைவுகளை சரிசெய்ய முடியும்," என்று அவர் கூறினார்.

சுவிஸ் மாநாட்டைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, அதனை நேரத்தை வீணடிக்கும் நிகழ்வு என விவரித்துள்ளது, வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யா பகுதியளவு ஆக்கிரமித்துள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து யுக்ரேன் படைகளை திரும்பப் பெற்றால் போர் நிறுத்தத்திற்கு சம்மதிப்பதாகக் கூறினார்.

ஆனால் ஒரு நாள் கழித்து உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மேற்கத்திய தலைவர்கள் புதினின் கருத்தை கடுமையாக நிராகரித்தனர்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புதினின் கருத்தை 'பிரசாரம்' என்று விவரித்தார் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், "பேச்சுவார்த்தைக்கு அவர் தயாராக இருப்பதாக ஒரு போலி கதையை கூறுகிறார்," என்று புதின் மீது குற்றம் சாட்டினார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய அரசுச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்ய தலைவர் யுக்ரேனுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை, ஆனால் அவர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த உத்தரவாதங்கள் தேவைப்படும் என்றும் ஜெலென்ஸ்கி ஒரு பங்கேற்பாளராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

ad

ad