ஜூன் 20 இல் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தவேளை இந்திய பிரதமரின் விஜயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் இலங்கையில் கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து நிச்சயமற்ற நிலையேற்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ம் திகதி தேர்தல் குறித்து கவனம் செலுத்துவதால் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலைவர்களுடனான ஈடாட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் எந்த வெளிநாட்டு தலைவரையும் உபசரிக்கும் நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர்களினது இலங்கை விஜயமும் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |