மொத்தமாக 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையாக 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதேவேளைகுறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக குறையவுள்ளது. வன்னி மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்கள் 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது |