புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2024

மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! [Wednesday 2024-09-25 18:00]

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர்

அதனடிப்படையில் வட மகாண ஆளுநராக முன்னாள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான என்.வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக முன்னாள் நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மகாண ஆளுநராக வசந்த குமார விமலசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநராக கபில ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராக ஹனீப் யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ad

ad