இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மஹிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டையில், நாமலுக்கு இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. |