புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2024

10 இலட்சம் ரூபாவை தீயிட்டு எரித்தவர் கைது! [Wednesday 2024-10-09 05:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று  வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றுக் காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.

இந்நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

இதுகுறித்து சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad