புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2024

மட்டக்களப்பில் சங்கு கூட்டணியின் வேட்புமனு தாக்கல்! - உதயகுமாரும் இடம்பெற்றார். [Thursday 2024-10-10 05:00]

www.pungudutivuswiss.com


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, நேற்று தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம் தலைமையில், நேற்று நண்பகல், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, நேற்று தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம் தலைமையில், நேற்று நண்பகல், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, 8 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், இந்துக்குருமார் ஒன்றியத்தின் உறுப்பினர் விநாயகமூர்த்திக் குருக்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பிரதித் தலைவர் இரா.துரைரட்டனம், நாகலிங்கம் சங்கரப்பிள்ளை, தமிழ்த் தேசியக் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர் தம்பிப்போடி வசந்தராஜா, சுப்ரமணியம் தேவராஜா, செல்வரத்தினம் மனோராதா ஆகியோரே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், கடந்த, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா இரவிராஜ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் நிலையில், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கிய பிரமுகர் மாணிக்கம் உதயகுமாரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இணைந்து, களமிறங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad