இது குறித்து கருத்து மேலும் தெரிவித்த ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்திற்குள் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிறுவப்படுவதற்கு ஏதுவாயமைந்த, மனித உரிமைகள் பேரவையின் 51/1 பரிந்துரை மற்றும் அதற்கு முந்தைய மனித உரிமைகள் பேரவையின் 46/1 பரிந்துரை ஆகியவற்றை இலங்கை எதிர்த்துள்ளது. A/HRC/57/G/1 ஆவணத்திலுள்ள இப்பேரவைக்கான எங்கள் விரிவான பதிலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள காரணங்களுக்காக, உயர் ஆணையரின் அறிக்கையிலிருந்தும் நாங்கள் விலகினோம். 51/1 பரிந்துரையானது, சம்பந்தப்பட்ட நாடு என்றபோதிலும், இலங்கையின் அனுமதியின்றி முன்வைக்கப்பட்டு, பிளவுபட்ட வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பரிந்துரையால் நிறுவப்பட்ட நிர்பந்தங்களை நீட்டிக்கும் எந்தவொரு அடுத்தடுத்த தீர்மானமும் சபையில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இச்சபைக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவூட்டியபடி, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்திற்குள் இவ்வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையொன்றை அமைப்பது என்பது பேரவையின் நிர்பந்தத்தின் முன்னோடியில்லாத மற்றும் தற்காலிகமானதொரு விரிவாக்கமாகும். மேலும் இது, சபையின் ஸ்தாபகக் கொள்கைகளான பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மைக்கு முரணானது. எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது. மேலும், இப்பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. மேற்கூறிய காரணங்களுக்காக, 51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி இச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் இப்பரிந்துரையை நிராகரித்த போதிலும், இலங்கையானது, வழக்கமான மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அனைத்து முக்கிய மனித உரிமைகள் உடன்படிக்கைகளுடன் மட்டுமல்லாது, உலகளாவிய கால ஆய்வுச் செயல்முறையின் கீழ் தனது தொடர்ச்சியான வாக்குறுதிகள் மற்றும் நீண்டகால ஆக்கபூர்வமான ஈடுபாட்டை இச்சபையுடன் தொடரும். நாம் அடையும் முன்னேற்றம் குறித்து சபைக்கு அவ்வப்போதைய இற்றைப்படுத்தல்களை வழங்குவோம் - என்றார். |