யாழ்ப்பாணத்தில் அமைந்து தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு பிராந்திய அலுவலத்திற்கு நேரில் சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனை சந்தித்து சுமார் 30 நிமிடங்களாக அவருடன் கலந்துரையாடியதுடன் தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்திருந்தார். இச் சந்திப்பில் தற்போதைய சூழ்நிமை , தேர்தல் நிலமைகள் தொடர்பில் சுமார் 30நிமிடங்களுக்கு மேலாக கலந்துரையாடியமையுடன் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவினை வழங்குவதாக கூறியிருந்தார். |