துறைமுகத்தில் இருந்த சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகிறது. ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் மாகாண ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்படுகிறது. அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொள்கலன்களை பரிசோதனை செய்யாமல் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது. 323 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் அறிந்துக் கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் முதலில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றார். |