புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2025

மதுபோதையில் கடைக்குள் அட்டகாசம்- மதகுரு கைது! [Friday 2025-01-31 05:00]

www.pungudutivuswiss.com


வவுனியா, ரயில் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்  தெரிவித்தனர்.

வவுனியா, ரயில் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் மது போதையில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் சென்ற இந்து மதகுரு ஒருவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகில் இருந்த தொலைகாட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக் காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர் குறித்த மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இந்து மதகுவை கைது செய்ததுடன், வவுனியா பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ad

ad