புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2025

076 944 9126, 071 564 97 53, 076 413 26 85, 074 149 75 54 இந்த எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
துபாயிலிருந்து இலங்கை தொழிலதிபர்களுக்கு தொலைபேசி
அழைப்புகள் மேற்கொண்டு மிரட்டி, கப்பம் வசூலிக்கும்
மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மோசடியுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்ற 32 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது.
மகிந்தவின் ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர் விரட்டியடிப்பு
மகிந்தவின் ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர் விரட்டியடிப்பு
மிரட்டல் அழைப்புகள்
துபாயில் உள்ள குற்றவாளிகள், இலங்கையில் இருக்கும் சிலரைப் பயன்படுத்தி, தொலைபேசி எண்கள் ஊடாகவும் நவீன முறைகளை பயன்படுத்தியும் மோசடிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் எச்சரிக்கை | Dubai Phone Scam Be Alert
கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் தொலைபேசி எண்களை பயன்படுத்தி, மிரட்டல் அழைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தங்கள் அழைப்புகள் ஒரு தொலைபேசி நிறுவனத்திலிருந்து வருவதாக மக்கள் நம்புவதற்காக, தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தியுள்ளமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீட்டிழுப்பு மூலம் பரிசு
மோசடியான முறையில், "சீட்டிழுப்பு மூலம் பரிசு வென்றுள்ளீர்கள்" என்று கூறி, பரிசை பெற்றுக்கொள்வதற்காக அனுப்பப்படும் OTP (ஒட்டிபி) எண்ணை பகிருமாறு கோரியுள்ளனர்.
இந்த எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் எச்சரிக்கை | Dubai Phone Scam Be Alert
பின்னர், அந்த OTP எண்ணை பயன்படுத்தி, தொடர்புடைய தொலைபேசி எண்ணின் தகவல்களை களவாடி, அதற்குரிய e-SIM உருவாக்கி, கப்பம் வசூலித்துள்ளனர்.
இந்த மோசடியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த 4 தொலைபேசி எண்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்:
அந்தவகையில் 076 944 9126, 071 564 97 53, 076 413 26 85, 074 149 75 54 இத்தகைய எண்களிலிருந்து அழைப்புகள் வந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்
Gefällt mir
Kommentieren
Senden
Teilen

ad

ad