புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2025

மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்த முன்னாள் போராளி! [Monday 2025-02-17 05:00]

www.pungudutivuswiss.com


பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில்  முன்னாள் போராளி நேற்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னாள் போராளி நேற்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்று தமது ஆதரவை வழங்கியதோடு குறித்த முன்னாள் போராளியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்பட்டு செல்வதாகவும் இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது சாதகமாக அமைகின்ற பட்சத்தில் நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்தனர்.

ad

ad