புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2025

வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! உக்ரைன் நகரங்களை இலக்கு வைத்த ரஷ்ய ட்ரோன்கள்

www.pungudutivuswiss.com
ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புக்கு இடையிலான போரானது
இன்றுடன் (பிப்ரவரி 24 )மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
நிலையில், உக்ரைனின் 13ற்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா பாரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதுவரை உக்ரைன் மீது நடந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷ்யா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி 2022இல் போரை தொடங்கியது.
அமெரிக்கா ஆதரவை தொடங்கும்! உக்ரைன் தரப்பு நம்பிக்கை
அமெரிக்கா ஆதரவை தொடங்கும்! உக்ரைன் தரப்பு நம்பிக்கை
மிகப்பெரிய தாக்குதல்
இந்நிலையில் ரஷ்யா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! உக்ரைன் நகரங்களை இலக்கு வைத்த ரஷ்ய ட்ரோன்கள் | The Largest Attack On Ukraine In History
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷ்யா 267 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: ரெலோவுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: ரெலோவுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி
1,150 ட்ரோன்கள்,
அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்! உக்ரைன் நகரங்களை இலக்கு வைத்த ரஷ்ய ட்ரோன்கள் | The Largest Attack On Ukraine In History
கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Gefällt mir
Kommentieren
Senden
Teilen

ad

ad