புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2025

குரங்கு பாய்ந்து விபத்து - பெண் பலி! [Tuesday 2025-02-25 16:00]

www.pungudutivuswiss.com


புதுக்குடியிருப்பு-ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த  துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு-ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்.

பயணித்துக் கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே மோதியதில் தாய் தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார். மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ad

ad