புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2025

170 சபைகளில் என்பிபி ஆட்சியமைக்க முடியாது! பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்! [Wednesday 2025-05-07 17:00]

www.pungudutivuswiss.com
நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சுயாதீன குழுக்களின் ஆதரவை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சுயாதீன குழுக்களின் ஆதரவை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற நிறுவனங்களில் தேசிய மக்கள் கட்சி சபைகளை நிறுவும் என்று அவர் கூறினார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் சபைகளை அமைப்பது நெறிமுறைக்கு புறம்பானது என்று அவர் கூறினார்.
அத்துடன், பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற கட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
[Thursday 2025-05-08 05:00]
அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கூறுவது பொய் என்பது தமக்கு தெரியும் என்பதை மக்கள் இந்த தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர். பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு மக்கள் இந்த செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
தற்போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளுராட்சிமன்றங்களில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அவை நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா வேறு எந்த கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை டில்வின் சில்வாவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவைய எமக்கில்லை. ஆனால் கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 67 இலட்சம் வாக்குகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டது. ஆனால் இம்முறை தேர்தலில் 40 இலட்சம் வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. 6 மாதங்களில் 27 இலட்சம் மக்கள் சகோதரர் அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்துள்ளனர். எனவே இனியாவது பொய் கூறுவதை நிறுத்துங்கள். ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தியதைப் போன்று ஆட்சியைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. அரசாங்கம் அதன் தவறுகளை திருத்திக் கொண்டு ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad