சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது. குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் |