புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2025

கிளிநொச்சியின் 3 சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு! [Wednesday 2025-05-14 06:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு கட்சி

யின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.

மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தெரிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதனும், உப தவிசாளராக புஸ்பநாதன் சிவகுமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சனும், உப தவிசாளராக திருமதி. குணலக்சுமி குலவீரசிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேனும், உப தவிசாளராக சிவகுரு செல்வராசாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தெரிவுகள் தொடர்பான மாவட்டக் கிளையின் எழுத்து மூல தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad