முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அகழ்வின் போது, நேற்று ஒரு சிறுமியின், ஆடைகள் , இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு இன்று தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. |