![]() தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |