இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அல் உதெய்ட் அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த மாதம் 23ம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கத்தாரில் உள்ள அல் அடிட் விமானப்படைத்தளத்தில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த விமானப்படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்பால் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் தாக்கியது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டார். தாக்குதலுக்கு உள்ளான செயற்கைக்கோள் படங்கள் கசிந்த பின்னர், பென்டகன் இனி மறைக்க முடியாததை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த மாத தாக்குதலின் போது கத்தாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. ஒரு முக்கிய அமெரிக்க தகவல் தொடர்பு குவிமாடம் 15 மில்லியன் டொலர்கள் அழிக்கப்பட்டது.