www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பை நீக்குவதற்கான சமகால அநுர அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த, தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குமாறு பொதுமக்களில் யாரும் கோரவில்லை. இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரியம்.
போர் மற்றும் சமாதானம் தொடர்பான முடிவுகளை எடுக்க மகிந்த ராஜபக்சவுக்கு உரிமை இருந்தபோது, அவருக்கு முன் இருந்த சிறந்த ஜனாதிபதிகள் அந்த முடிவை எடுக்காத நிலை காணப்பட்டது.
இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த கதி! மீளாத்துயரத்தில் குடும்பத்தினர்
இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த கதி! மீளாத்துயரத்தில் குடும்பத்தினர்
மகிந்தவுக்கு அழுத்தம்
உலக நாடுகளின் கடுமையான அழுத்தங்களை பொருட்படுத்தாமல் மகிந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை | Mahinda Cannot Go To America To Get Medicine
இதன் காரணமாக இன்றும் மகிந்த ராஜபக்ச மருந்து வாங்க ஐரோப்பா, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்கு கூட செல்ல முடியாது நிலை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அவருக்கான உரிமைகளை சமகால அரசாங்கம் நீக்க முடிவு செய்திருப்பது தவறான செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூரில் நடந்த மாபெரும் கொள்ளை..! அம்பலப்படுத்திய அர்ச்சுனா
நல்லூரில் நடந்த மாபெரும் கொள்ளை..! அம்பலப்படுத்திய அர்ச்சுனா
போர்க்குற்றவாளி
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நிறுத்தப் போவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ள நிலையில், பிரேமநாத் சி. தொலவத்த கருத்து வெளியாகி உள்ளது.
புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை | Mahinda Cannot Go To America To Get Medicine
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை அடுத்து, மகிந்த உள்ளிட்ட அவர்களின் குடும்பம் போர்க்குற்றவாளியாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக அந்த நாடுகளுக்கு மகிந்த ராஜபக்ச செல்ல முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.