முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது
முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அங்கீகாரத்தை பெறும் வகையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.