புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2025

மன்னார் காற்றாலை, மணல் அகழ்வுகளை நிறுத்தக் கோரி 15 எம்.பிக்கள் கடிதம்! [Thursday 2025-08-07 16:00]

www.pungudutivuswiss.com

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் சுமார் 15 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற திட்டங்களை நிறுத்த கோரியே குறித்த கடிதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த நடவடிக்களை ஆராய்ந்து மக்களுக்கான தீர்வை எட்டும் வகையிலான கலந்துரையாடல் இன்று (7)வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின்கோபுரங்கள் அமைத்தல் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக மன்னாரில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad