பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நான் இந்த விவாதத்தில் உரையாற்ற தனது நேரத்தை தந்த இ.தொ.க. செயலாளரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு நன்றி. அவரது அம்மம்மாவின் இறுதிக்கிரியைக்காக வெளிநாடு சென்றுள்ளார். தென்னக்கோன் விடயத்தில் அவரினதும் எமது நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கின்றது நாம் இந்த தீர்மானத்துக்கு பூரண ஆதரவு வழங்குகின்றோம். தேசபந்து தென்னக்கோன் ஒரு அரசியல் முகவர் அவருடைய காலம் முழுவதும் அரசியல் வாதிகளுக்கு முகவராக செயற்பட்ட வரலாறு கொண்ட ஒருவர். அந்த வகையில் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஒரு அரசியல் பின்னோக்கத்தோடு அணுகப்பட வேண்டும் என்பதில் இந்த பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய அவரை தங்களின் முகவராக பயன்படுத்திய தரப்பை தவிர அனைத்து தரப்புக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை இந்த தேசபந்து தென்னக்கோன் என்ற நபர் மட்டும்தான் அவ்வகையான அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு கலாசாரத்தில் மாட்டுப்பட்டவர் என்று எவரும் சொல்ல முடியாது. இந்த அரசாங்கம் முன்வைக்கின்ற பிரதானமான குற்றச்சாட்டு தங்களின் ஆட்சி கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்க முன்னர் அதாவது கிட்டத்த்தர்ற 76 அவருடங்களாக, பிரித்தானியர் இந்த தீவை விட்டு வெளியேறிய நாளிலிருந்து ஆட்சியில் இருந்த அனைத்து தரப்புக்களும் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி அரசு உத்தியோகஸ்தர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை தங்களின் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி ஒட்டுமொத்த அரச இயந்திரமே அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு நிலையில் இருப்பதாக் இந்த அரசாங்கம் ஒவ்வொரு தடவையும் குற்றம்சாட்டுகின்றது. அது உண்மை. ஆனால் இந்த அரசாங்கம் இன்று தேசபந்து தென்னகோனுக்கு எதிராக எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு காரணம் என்னவெனில் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது தேசபந்து தென்னகோனினால் எந்த வித நன்மையும் பெறமுடியாது போயிருக்கும். நான் ஏன் இதனைக்கூறுகின்றேன் என்றால் இந்த அரசாங்கமும் உண்மையில் அரசு உத்தியோகஸ்தர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் சேவை செய்யக்கூடிய நிலையில் இருக்களோடாது என்ற நிலைப்பாட்டில் இல்லை என்பதனை சுட்டிக்காட்டுவதற்கும் நிரூபிப்பதற்குமாகவே நான் இந்த விடயத்தை எடுத்துக்காட்டுகின்றேன். அரசாங்கங்கள் அரச உத்தியோகஸ்தர்களை தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றபோது அந்த அரசாங்கம் மாறுகின்றபோது மாறிய அரசாங்கம் அந்த நபர்களை குறிவைத்து அவர்களை அகற்றுவதற்கு எடுக்கும் செயற்பாடுகளை இந்த சபையில் உள்ள அனைவரும் வரவேற்பார்கள். நாமும் வரவேற்போம். ஆனால் ஒரு அரசு அதாவது அரசாங்கங்கள் அல்ல ஆட்சிக்கு வரக்கூடிய அனைத்து அரசாங்கங்களும் ஒரு அரசின் கொள்கையாக குறிப்பிட்ட ஒரு தரப்பை குறிவைக்கின்றபோது அது ஒரு அரசின் கொள்கையாகும். இந்த நாட்டில் வாழும் ஒரு இனத்தை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வேலை செய்கின்றபோது அதற்கு என்ன பரிகாரம்?அதற்கு என்ன பதில்? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ் சேவையில் இருக்கின்றவர்களும் இராணுவத்தில் இருக்கின்றவர்களும் படுமோசமாக குறிவைக்கப்படுகின்றார்கள் .இதுதான் எமது வரலாறு.தேசபந்து தென்னகோன் தெற்கு அரசியலில் இருப்பதால் இன்று உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதால் நீங்கள் அவரை குறி வைக்கின்கிறீர்கள். ஆனால் அவரை மட்டும் குறிவைப்பதால் நீங்கள் இந்த நாட்டினுடையை அடிப்படை புற்றுநோயாக இருக்கின்ற அனைத்து விடயங்களிலும் தலையீடு செய்கின்ற அரசியல் புற்றுநோயை நீங்கள் நீக்கப்போவதில்லை. அப்படி நீங்கள் நீக்குவதற்கு முயற்சித்தாலும் கூட தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள் தமிழ் மக்கள் இன்று சந்திக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் ஒருபோதும் நீதியை வழங்கப்போவதில்லை. ஏனெனில் நீங்களும் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயற்படுகின்ற ஒரு தரப்பாகவே இருக்கின்றீர்கள். செம்மணியை எடுத்துக்கொண்டால் மனித புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.கிட்டத்தட்ட 130 எலும்புக்கூடுகளுக்கு மேலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிவான் ஒரு கட்டளையிட்டுள்ளார் . அதாவது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தடயப் பொருட்களை பொதுமக்களுக்கு முன்பாக வைத்து அவர்கள் அதனை அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.. செவ்வாய்க்கிழமை (5) இந்த விவாதம் நடக்கின்றநிலையில் செம்மணியில் பொது மக்களை அழைத்து அந்த தடயப்பொருட்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நிமிடத்தில் நீதி அமைச்சின் செயலாளர் அங்கு வேலை செய்து கொண்டிருக்கின்ற, இந்த எலும்புக்கூட்டு அகழ்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றார். இதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். இது அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அல்லவா? இது அரசியல் தலையீடு இல்லையா?இது ஒரு அழுத்தத்தை கொடுக்கும் விடயம் அல்லவா? நீதிமன்றம் நடத்துகின்ற ஒரு செயற்பாட்டில் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் நீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். நீதி அமைச்சு அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வது அரசியல் தலையீடு.அதை நீங்கள் செய்யலாமா? நான் பொறுப்புடன்தான் கூறுகின்றேன். நீதி அமைச்சு செயலார்தான் இவ்வாறு செயற்படுகின்றார். நான் மிகவும் மதிக்கும் அம்மணி அவர். இப்படி அவர் செயற்படுவார் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் அது நடக்கின்றது. இன்று யாழ்ப்பாணத்தில் செம்மணி தடயப்பொருட்களை அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள இடத்தின் வாசலில் ஏ. எப்.டி.சி.ஐ.டி. யினர் இருக்கின்றார்கள். இது மக்களை மிரட்டும் விளையாட்டல்லவா? மக்கள் ஏற்கனவே பீதியில் இருக்கின்ற நிலையில் அம்மக்கள் அந்த இடத்திற்கு போகின்றபோது அவர்களை மிரட்டுகின்ற திட்டமிட்ட செயற்பாடல்லவா இது?ஆனால் இதனை நீங்கள் செய்யலாம். ஏனெனில் இது தமிழனுக்கு நடக்கின்றது. அதனால் இது அரசியல் தலையீடு அல்ல. இது என்ன நியாயம் ?அரசியல் தலையீடு என்ற புற்றுநோயை நீக்க அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைக்கு எமது ஆதரவுண்டு ஆனால் இந்த ''அரசு''தமிழ மக்களுக்கு செய்கின்ற அநியாயம் இனறைக்கும் தமிழ் மக்கள் பொறுப்புக்கூறுவதற்கு ஒரு தாகத்தோடு இருக்கின்ற நிலையில் நீங்கள் இன்றும் எமது மக்களு செய்கின்ற அநியாயத்தை மன்னிக்கவே முடியாது. இதனால்தான் நாம் திரும்பவும் கூறுகின்றோம் உங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் இனம் சார்ந்த விடயங்களில் ஒரு வித்தியாசமும் கிடையாது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சென்றிருந்தது.அகழ்வு இடங்களை கண்காணித்தது. தங்களின் கருத்துக்களை தெரிவித்தது. இவர்கள் உண்மையில் ஒரு சுயாதீனமான அமைப்பாக இருந்தால் அவர்கள் இந்த நாட்டினுடைய அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால். நீங்கள் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ரோம் சாசனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றங்கள் இந்த செம்மணியில் நடந்துள்ள அநியாயம் ரோம் சாசனத்தில் இருக்கக் கூ டிய குற்றங்கள். இந்த நாட்டில் இவை குற்றங்களைக் அறிவிக்கப்படாத நிலையில் சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டும்தான் ஒரு இந்த அநியாயங்களுக்கு நீதியக்கொடுக்கும் என்ற அறிக்கையைத்தான் முன்வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை சொல்லாமல் ஊடகங்களுக்கு தயவு செய்து உணர்வு பூர்வமாக இந்த விடயங்களை வெளிக்கொண்டு வராதீர்கள் என புத்திமதி கூறுகின்றார்கள். அதனால்தான் நான் கூறுகின்றேன் ஒரு அரசே ஒரு இனத்துக்கு எதிராக இருக்கின்றபோது அந்த இனத்துக்கு நீதி இந்த அரசு கட்டுமானங்கள் ஊடாக கிடைக்காது என்பதை இன்றாவது 130 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையிலாவது ஏற்றுக்கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்றார். |