ஜனாதிபதி அனுரவின் உள்நாட்டுப் பயண விபரங்களை வெளியிட மறுப்பு! [Thursday 2025-08-28 19:00] |
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமைகோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜினாத் பிரேமரத்னவால் ஆகஸ்ட் 4 ஆம் திகதி கேட்கப்பட்ட கேள்விகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(b)(i) இன் கீழ் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முறையாக நிராகரிக்கப்பட்டது |
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு நேரடியாக தொடர்புடையதாகக் கருதப்படும் தகவல்களை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கிறது. அதன் பதிலில், சட்டத்தின் பிரிவு 31(1) இன் கீழ் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று செயலகம் விண்ணப்பதாரருக்குத் தெரிவித்துள்ளது. |
-
28 ஆக., 2025
www.pungudutivuswiss.com