செம்மணியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! ![]() [Thursday 2025-08-28 19:00] |
![]() யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. |
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாணம் 36வது நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழ்வுப் பணிகள் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் புதிதாக 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனடிப்படையில், மொத்தம் 164 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன |
-
28 ஆக., 2025
www.pungudutivuswiss.com