புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2025

கூகுளுக்கு €2.95 பில்லியன் அபராதம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நடவடிக்கை!

www.pungudutivuswiss.com

ஐரோப்பிய ஒன்றியம் கூகுளுக்கு இணையவிளம்பரத் துறையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக சுமார் 2.95 பில்லியன்

 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இது ஐரோப்பிய ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். 

கூகுள் இந்த தீர்ப்பை "தவறானது" என கண்டித்து, மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு ஐரோப்பிய நிறுவனங்களின் வருமானத்தை பாதிக்கும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு, விளம்பர துறையில் கூகுளின் சில செயல்பாடுகளை பிரிக்கலாம் என ஆணையம் எச்சரித்திருந்தது.

இந்த வாரம் மட்டும் கூகுளுக்கு இது மூன்றாவது பெரிய அபராதம். அமெரிக்காவில் தனியுரிமை மீறலுக்காக 425.7 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு இடப்பட்டுள்ளது; பிரான்ஸில் விளம்பர தவறுகளுக்காக 325 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுள் குறோம் வழிகாட்டியை விற்க கட்டாயபடுத்தபடாத முக்கிய சட்ட வெற்றியை பெற்றது

ad

ad