புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2025

www.pungudutivuswiss.com
முன்னைய ஆட்சியாளரை கொள்ளையர்கள் என்றவர்களிடம் இவ்வளவு சொத்து வந்தது எப்படி?
[Thursday 2025-09-18 07:00]


தேசிய மக்கள் சக்தி மக்களிடம் எந்தளவுக்கு பொய்களைக் கூறியிருக்கிறது என்பது தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரை கொள்ளையர்கள் என மக்கள் மத்தியில் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தவர்களின் சொத்து மதிப்பு 25 – 30 கோடி ரூபாவாகக் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சுமத்தினார்.

தேசிய மக்கள் சக்தி மக்களிடம் எந்தளவுக்கு பொய்களைக் கூறியிருக்கிறது என்பது தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரை கொள்ளையர்கள் என மக்கள் மத்தியில் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தவர்களின் சொத்து மதிப்பு 25 – 30 கோடி ரூபாவாகக் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சுமத்தினார்

குருணாகலில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தி மக்களிடம் எந்தளவுக்கு பொய்களைக் கூறியிருக்கிறது என்பது தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு மாத்திரமே சொத்துக்கள் காணப்படுவதாகவும், அவர்கள் ஊழல் மோசடியூடாகவே சொத்துக்களை சேகரித்துள்ளதாகவும் இவர்கள் தேசிய மக்கள் சக்தியினரால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமது கட்சி ஆதரவாளர்களே வாகனத்துக்காக எரிபொருளைக் கூட வழங்குவதாக வசந்த சமரசிங்க முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவ்வாறு குறிப்பிட்டவர்களின் சொத்து மதிப்பு இன்று 25 – 30 கோடியாகக் காணப்படுகிறது. மற்றுமொருவர் அநுராதபுரத்தில் மேலதிக வகுப்பினை நடத்துவதற்கு கட்டடமொன்றை வாடகைக்கு வழங்கி அதன் மூலம் தனக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தான் இன்று இவ்வாறான கருத்துக்களையும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான போலியான அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டும். நாட்டில் எந்தவொரு தரப்பினருக்கும் செயற்திறனுடன் பணியாற்ற இடமளிக்காமல் நாட்டை வீழ்ச்சியடைச் செய்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.

ad

ad