புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2025

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி, பிரதமரின் சொத்துக்கள் எவ்வளவு?
[Thursday 2025-09-18 07:00]


ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லஞ்ச  மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.

சொத்து விபரங்கள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தகவல்களை வெளியிட்டதையடுத்து அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக அவர்கள் இருவரினதும் சொத்துகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்ட சொத்து விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

காணி மற்றும் வீடுகள் - 40,000,000 ரூபாய்

தங்கநகைகள் - 1,125,000 ரூபாய்

வாகனங்கள் - 15,000,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -1,377,435 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 57,502,435 ரூபாய்

2. பிரதமர் ஹரிணி அமரசூரிய

காணி மற்றும் வீடுகள் - 10,555,615 ரூபாய்

தங்கநகைகள் - 7,000,000 ரூபாய்

முதலீடுகள் - 6,842,604 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -4,082,302 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 27,000,000 ரூபாய்

3. அமைச்சர் பிமல் ரத்நாயக்க

காணி மற்றும் வீடுகள் - 6,000,000 ரூபாய்

தங்கநகைகள் - 1,310,000 ரூபாய்

வாகனங்கள் - 15,000,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -2,745,794 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 25,000,000 ரூபாய்

4. அமைச்சர் விஜித ஹேரத்

காணி மற்றும் வீடுகள் - 10,007,000 ரூபாய்

வாகனங்கள் - 27,000,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -575,276 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 37,582,276 ரூபாய்

5. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

காணி மற்றும் வீடுகள் - 55,000,000 ரூபாய்

தங்கநகைகள் - 3,100,000 ரூபாய்

வாகனங்கள் - 21,300,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -4,768,750 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 84,168,750 ரூபாய்

6. அமைச்சர் வசந்த சமரசிங்க

வணிக கட்டடங்கள் - 235,000,000 ரூபாய்

காணி மற்றும் வீடுகள் - 10,000,000 ரூபாய்

சூரிய மின்கல கட்டமைப்பு-6,500,000 ரூபாய்

தங்கநகைகள் - 4,550,000 ரூபாய்

வாகனங்கள் - 15,000,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,153,850 ரூபாய்

LOLC பங்குகள் - 21,000 ரூபாய்

வருடாந்த வருமானம் - 15,300,000 ரூபாய்

டிஜிட்டல் பணம் - 3,000 அமெரிக்க டொலர்

7. பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

காணி மற்றும் வீடுகள் - 76,000,000 ரூபாய்

வருடாந்த வருமானம் - 9,678,185 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 21,933,367 ரூபாய்

8. நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

காணி மற்றும் வீடுகள் - 5,500,000 ரூபாய் ( மேலும் சில இடங்களின் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)

வாகனங்கள் - பெறுமதி குறிப்பிடப்படவில்லை

முதலீடுகள் - 39,000,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -124,000,000 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 168,500,500 ரூபாய்

9. ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி

காணி மற்றும் வீடுகள் - 268,000,000 ரூபாய்

வாகனங்கள் - 22,000,000 ரூபாய்

தங்க நகைகள் - 14,000,000 ரூபாய்

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 7,500,000 ரூபாய்

மொத்த சொத்து மதிப்பு - 311,500,000

10. ஹர்ஷ டி சில்வா எம்.பி

காணி மற்றும் வீடுகள் - 662,000,000 ரூபாய்

வாகனங்கள் - 129,200,000 ரூபாய்

முதலீடுகள் - பெறுமதி குறிப்பிடப்படவில்லை

மொத்த சொத்து மதிப்பு - 141,941 அமெரிக்க டொலர்

11. எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

2025 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை

ad

ad