-

16 செப்., 2025

www.pungudutivuswiss.com
பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் - பிள்ளையானை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
[Tuesday 2025-09-16 17:00]


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களை, கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா முன்னிலையில் முற்படுத்திய போதே சிஐடியினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். . அத்துடன், நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள், இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் நீதவான் முன்னிலையில் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நடராசா நகுலேந்திரன் எனப்படும் ‘சிம்பு’, கதிர்காமர் தம்பி ஜெயகீசன் எனப்படும் ‘ஜெயந்தன்’ மற்றும் நிமல் தேவசுகன் எனப்படும் ‘ஜெயகாந்தன்’ ஆகிய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு நீதினமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்போது, சந்தேகநபர்களான மூவரும் இந்த வாக்குமூலங்களை சுதந்திரமாகவும் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் வழங்குவதாக தங்கள் சட்டத்தரணி அசோக வீரசூரிய மூலம் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சட்டத்தரணி வீரசூரியவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நீதவான் முடிவு செய்துள்ளார்.

ad

ad