-

4 செப்., 2025

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றின் மேல் ஒன்றாக கிடந்த எலும்புக்கூடுகள்!
[Thursday 2025-09-04 10:00]


யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய எலும்புக்கூட்டுத் தொகுகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு எலும்புக் கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 வது நாளாக நேற்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

இதுவரையில் 213 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad