புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2025

www.pungudutivuswiss.com
தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்! Top News
[Monday 2025-09-15 18:00]

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்  நல்லூரில் நடைபெற்றது.

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் நடைபெற்றது.

நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றது, அதை தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன் போது பொதுச் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 செப்டெம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad