
சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய ஒரு
கொடூரமான தாக்குதல் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு உண்ணப் பயன்படுத்தும் உலோக ஃபோர்க்கைக் கொண்டு பயணி ஒருவர் இரண்டு இளம் வயதுச் சிறுவர்களைக் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி, சம்பவம் நடந்தபோது:
17 வயதுடைய இரண்டு இளைஞர்கள். ஒருவர் தோள்பட்டையிலும், மற்றவர் தலையின் பின் பகுதியிலும் குத்தப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இருந்த உலோக ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாக்கிய நபர், அவரை அடக்க முயன்ற விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளை நோக்கி, கையால் துப்பாக்கி சுடுவது போல் சைகை காட்டி நாடகமாடியுள்ளார். மேலும், அவர் ஒரு பெண் பயணிக்கு அறைந்ததுடன், விமானப் பணியாளர் ஒருவரையும் தாக்க முயன்றார்.
இந்தக் கொடூரமான தாக்குதலாலும், விமானப் பயணி உருவாக்கிய வன்முறை மிகுந்த குழப்பத்தாலும், விமானம் உடனடியாக பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு (Boston Logan International Airport) திசை திருப்பப்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பிரணீத் குமார் உசிர்பள்ளி (Praneeth Kumar Usiripalli) என அடையாளம் காணப்பட்ட 28 வயதான அந்தப் பயணி, தரையிறங்கியவுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ‘விமானத்தில் அபாயகரமான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக’ கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் செயல் பெரும் குழப்பத்தையும், விமானப் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.