அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி விட்டுத் திரும்பிய மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த சுமார் 40 பேர் தலாவ மற்றும் தம்புத்தேகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தனியார் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. .