-

10 நவ., 2025

கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு! [Monday 2025-11-10 15:00]

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

ரெலோ கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் அவர் இவ்வேறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசிய பேரவையுடன் புரிந்துணர்வு ஒன்றையும் மேற்கொண்டிருக்கின்றோம். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என்றார்

ad

ad