-

14 நவ., 2025

பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுதலை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்
 என பாரிஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பரில் அவருக்கு விதிக்கப்பட்ட குற்றசதி (criminal conspiracy) தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வரை அவர் விடுதலையாக இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்கோஸி, 2007ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கான நிதியை லிபியாவிலிருந்து சட்டவிரோதமாக பெற்றதாகவும், அதற்குப் பதிலாக தூதரக சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வீடியோ இணைப்பின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், தனது 20 நாட்கள் சிறை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

வழக்குரைஞர்கள், அவரை நீதித்துறை கண்காணிப்பில் விடுவிக்க பரிந்துரைத்துள்ளனர்.

இதன் படி, அவருடன் தொடர்புடைய நபர்களை அவர் தொடர்புகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் தற்போதைய பிரான்ஸ் நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மானியன் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தர்மானியன், கடந்த அக்டோபரில் சர்கோஸியை சிறையில் சந்தித்ததற்காக கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தார்.

ad

ad