-

7 நவ., 2025

கொலன்ன பிரதேச சபையின் பட்ஜெட்டில் என்பிபி தோல்வி! [Friday 2025-11-07 07:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கொலன்ன பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டில், தோல்வியடைந்துள்ளது. கொலன்ன  பிரதேச சபையின் வரவு -செலவுத் திட்டத்தை பரிசீலிக்க சபை தவிசாளர்  சம்பத் குணசிங்க தலைமையில் சபை, வியாழக்கிழமை (06) கூடியது.

கொலன்ன பிரதேச சபையில் 19 ஆசனங்கள் உள்ளன. அதில், தேசிய மக்கள் சக்திக்கு ஒன்பது ஆசனங்கள் உள்ளன. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐந்து ஆசனங்கள் உள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு மூன்று ஆசனங்கள் உள்ளன. ஐ.தே.க.வுக்கு ஒரு ஆசனமும். தாய்நாட்டு மக்கள் கட்சி (திலித் ஜெயவீரவின் கட்சி) ஒரு ஆசனமும் உள்ளது.

ஒன்பது இடங்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி கொலன்ன ஆட்சிக்கு வந்தது. வியாழக்கிழமை (06) அன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, ​​எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு குழுக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தன. இறுதியாக, கூட்டு எதிர்க்கட்சி திறந்த வாக்கெடுப்பைக் கோரியது.

ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக வாக்களித்தனர். அதன்படி, ஆளும் கொலன்ன உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஒன்பது வாக்குகளை அளித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பத்து பேரும் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர். பட்ஜெட் ஒரு வாக்கு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

ad

ad