-

19 நவ., 2025

புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். இழந்த தமது உறவினர்களை நினைவு கூர்வதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு.

அதற்கு எவ்வித தடையும் இல்லை. இதனை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாத அமைப்பினை சார்ந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பரில் எமது அரசாங்கம் முழுமையாக ஆட்சியைப் பொறுப்பேற்றது. அன்றிலிருந்து கடந்த ஓராண்டு காலத்துக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில குழுக்களால் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சி காலங்களில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாதம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

எனவே மீண்டும் நாட்டில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளித்து விடக் கூடாது என்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தiயும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதி, ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைககளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.

ad

ad