-

28 டிச., 2025

2026 தேர்தல் கூட்டணி | திமுகவா அல்லது தவெகவா., மீண்டும் விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ்.!

www.pungudutivuswiss.com20
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி; திமுகவா அல்லது தவெகவா எனும் விவாதத்தை காங்கிரஸ் மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. இது குறித்துப் பார்க்கலாம்!

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸுக்குள் இரு தரப்பு குரல்கள் ஒலித்துவருவதை அறிவோம். பத்தாண்டுகளாக வெற்றி கூட்டாளியாக திகழும் திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரலாம் என்று ஒரு தரப்பு பேச, விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுடன் செல்லலாம் என்று இன்னோர் தரப்பு பேசிவருவகிறது. இதனூடாக பொதுவெளியில் சமீப காலமாக தங்கள் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் காங்கிரஸார்.


Pause

Unmute
Remaining Time -9:55

Close PlayerUnibots.com
தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி
தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்திpt web
“கூட்டணி ஆட்சி; ஆட்சியதிகாரத்தில் பங்கு” எனும் குரல்களை இப்போது அடிக்கடி கேட்க முடிகிறது. இதன் உச்சம்போல, சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பினார் காங்கிரஸ் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி. “ஆட்சியில் பங்கு” எனும் குரலுக்கு ஆதரவாகப் பேசிவந்த இவர், விஜய் தொடர்பாகவும் நேர்மறை கருத்துகளை உதிர்த்துவந்தார். அடுத்து, விஜயைச் சந்தித்ததோடு, சாதாரண சந்திப்பு குற்றம் அல்ல என்றும் கூறினார். காங்கிரஸ் உருவாக்கிவரும் இத்தகைய புகைச்சல்களால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, கூட்டணி தொடர்பாக ஒரு முடிவெடுக்கப்படும்படி காங்கிரஸ் தலைமைக்கு செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக திமுகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது காங்கிரஸ்.

ஆகப் பெரும்பாலானோர் தவெகவுடனான கூட்டணிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளதோடு, உள்ளூர் அளவில் திமுகவினர் தங்களை மதிக்கவில்லை என்றும், “நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புள்ள முன்னணி தலைவர்கள் 100 பேரும் தங்கள் நலனுக்காகவும், வாரிசுகள் நலனுக்காகவும் மட்டுமே திமுகவை ஆதரிக்கின்றனர்; கட்சியின் எதிர்கால நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை” என்றும் கருத்துகள் சென்றதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸின் கூட்டணி கணக்கு
“ஜனநாயகப்படி ஜனநாயகன் முடிவெடுக்க வேண்டும்..” - விஜய்க்கு தமிழிசை மறைமுக கூட்டணி அழைப்பு

தவெக புதிய கட்சி என்பதால், 2026 தேர்தலில், 50 தொகுதிகள் முதல் 80 தொகுதிகள் வரை கேட்டுப் பெற முடியும். விளைவாக, தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்டமைப்பைப் பரவலாகக் கொண்டுசேர்க்க முடியும். தேர்தல் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என்றாலும், இப்போதுள்ள சூழலைக் காட்டிலும் குறைந்தது இரண்டு மூன்று மடங்கு பேருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அளிக்க முடியும். தமிழ்நாட்டில் 2029 மக்களவைத் தேர்தல் சமயத்தில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் இளைஞர்கள் எனும் வரையறைக்குள் வருவார்கள்; இந்தப் பிரிவினரை அடைய எல்லாக் கட்சிகளுமே கவனம் செலுத்துகின்றன.

காங்கிரஸ்
காங்கிரஸ்PT Web
திமுக, விசிக தொடங்கி நாதக, பாஜக வரை இளைஞர்களிடம் இன்று சென்றிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் இளைஞர்கள் மத்தியில் செல்ல எந்த வழியும் இல்லாமல் இருக்கிறது; இத்தகு சூழலில், தன்னுடைய ஆதரவாளர்கள் படையில் இளைஞர்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள தவெகவுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் இளைஞர்களை சென்றடைய முடியும். எல்லாவற்றுக்கும் மேல், ஒருவேளை சிரஞ்சீவி போன்று தனிக் கட்சியை விஜயால், நீண்ட காலத்துக்கு நடத்த முடியாமல் போனாலும், விஜயும் அவருடைய கட்சியினரும் இணைய காங்கிரஸ் முதன்மை வாய்ப்பாக அமையும். இப்படி பல வாய்ப்புகள் விஜயுடன் கை கோர்ப்பதால், காங்கிரஸுக்கு இருக்கின்றன. மேலும், திமுகவுடன் செல்லும்பட்சத்தில் ஏற்கெனவே உள்ள உறைநிலையிலேயே காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும் சூழலே நிலவும் என்று தவெகவுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

காங்கிரஸின் கூட்டணி கணக்கு
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களமிறங்கிய சீமான்.. நாம் தமிழர் கட்சி கடந்து வந்த பாதை!!

ad

ad