நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு
இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
