-

27 டிச., 2025

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்!.. கைது செய்ததற்கு கண்டனம்!.. நீதிமன்றம் அதிரடி.

www.pungudutivuswiss.com
அரசு அதிகாரியாக இருந்து அதன்பின் பத்திரிக்கையாளராக மாறியவர் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியா என்கிற யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருகிறார். கடந்த பல வருடங்களாகவே யூடியூபில் ஆளும் கட்சிக்கு எதிராக பல தகவல்களையும் இவர் பேசி வந்தார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் திமுக அரசு இவரை அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைக்கும். ஆனாலும் ஜாமினில் வெளியே வருவார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் மருமகன் சபரீசன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்பான பல விஷயங்களையும் சவுக்கு சங்கர் தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காவல் துறை அதிகாரிகள் சங்கரின் வீட்டுக்கு சென்று அவரின் வீட்டு கதவை உடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இது திமுகவின் அராஜகப் போக்கு.. பத்திரிக்கை சுதந்திரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதிக்கவில்லை என்றெல்லாம் அப்போது பலரும் பேசினார்கள். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு மூன்று மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் பி.தனபால் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்திருருக்கிறது.

recommended by



BTC Income
Schock! Dank KI verdienen Sie 5800 Fr pro Tag
Mehr wissen
Tamil
ஓடும் காரில் பெண் ஐடி ஊழியர் பாலியல் பலாத்காரம்.. நிறுவனத்தின் சி.இ.ஓ, கணவன் - மனைவி கைது..!
Read more
சவுக்கு சங்கரின் கைது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் என்றும் ஏன் ஒருவரை ஏன் இவ்வளவு டார்ச்சர் செய்யவேண்டும்? நீதிபதிகள் காவல்துறையை நோக்கி கேள்வி எழுப்பினர். மேலும் ‘உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

உடல் நிலையை காரணம் காட்டி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று இரவு அவர் விடுதலை ஆவார் என செய்திகள் வெளிவந்திருக்கிறது.

ad

ad