-

10 டிச., 2025

கொங்கு பகுதியை அடுத்து டெல்டாவிலும் கை வைத்த விஜய்: TVKஇல் இனையும் வைத்திலிங்கம்

www.pungudutivuswiss.co

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் 

செங்கோட்டையன் விலகி ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கமும் இன்று தவெகவில் இணையவிருப்பதாகப் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கரின் தகவல்
சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், தவெகவை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் விதமாக, “முதியோர் இல்லம் ஆகிறதா தவெக? 77 வயதான செங்கோட்டையனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 70 வயதான வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணைகிறார். கொங்கு பகுதியை அடுத்து, டெல்டாவை கைப்பற்றியது தவெக,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தி உண்மையெனில், கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, டெல்டா பகுதியிலும் தவெக தனது செல்வாக்கை வலுப்படுத்த முயல்கிறது என்பது தெளிவாகிறது. எனினும், வைத்திலிங்கம் தரப்பிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

விஜய்யின் புதிய உத்தி
செங்கோட்டையன் இணைவதற்கு முன்பே பல அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தவெகவில் இணைய விரும்பியதாகவும், ஆனால் விஜய்யை அணுகுவது கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கரூரில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் தேவை என்று விஜய் உணர்ந்ததாகவும், அதன் பின்னரே மூத்த அரசியல்வாதிகளை வரிசையாக இணைக்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்தனர். சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தாக்கம்
அடுத்தடுத்து அ.தி.மு.க.வின் முக்கிய முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த தலைகள் தவெகவை நோக்கிச் சேர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.தி.மு.க.வில் இருந்தும் சில முக்கிய நபர்களைத் தவெகவுக்குக் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அடுத்தடுத்த நகர்வுகள் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. விஜய், தனது கட்சியை விரைவாக வலுப்படுத்த மூத்த தலைவர்களின் அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தத் திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ad

ad