www.pungudutivuswiss.com
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தனி தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார்.கடந்த 2016 மார்ச்சில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, 'நியூ லிங்க் ஓவர்சீஸ் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்திடம், தொழில் அபிவிருத்திக்கு என முதல் கட்டமாக, 51 லட்சத்து 9,212 ரூபாயும்; இரண்டாம் கட்டமாக, 80 லட்சத்து 59,107 ரூபாயும் கடனாக பெற்று உள்ளார். இதில், குறிப்பிட்ட தொகையை தவணையாக அவர் திருப்பி செலுத்தி வந்துள்ளார்.
மீதமுள்ள கடன் தொகைக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளை நிதி நிறுவனத்திடம் சதன் திருமலைக்குமார் வழங்கி உள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் நிதி நிறுவனம் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து, சதன் திருமலைக்குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு, நிதி நிறுவனம் தரப்பில் அதன் இயக்குநரால் 2019ல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. எம்.எல்.ஏ., என்பதால், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
20 hour(s) ago
5
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
பின், சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை, 3வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் முன்னிலையில் நடந்து வந்தது. நிதி நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் எம்.சின்னதம்பி ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் நேற்று பிறப்பித்த தீர்ப்பு: காசோலை மோசடி வழக்கில், சதன் திருமலைக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படுகிறது.